மத்திய அரசு வேலை; 12ம் வகுப்பு தகுதி போதும்.. 3712 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க கடைசி தேதி!

published 1 week ago

மத்திய அரசு வேலை; 12ம் வகுப்பு தகுதி போதும்.. 3712 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க கடைசி தேதி!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

மத்திய அரசுத்துறைகளில் எழுத்தர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட 3712  காலி பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க  07.05.2024 கடைசி தேதி ஆகும்.

பணியிடங்கள்  விவரம்


Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO), Data Entry Operator, Grade ‘A’

கல்வி


பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால்  சில பதவிகளுக்கு  கூடுதல் தகுதிகள் தேவை இருக்கும்.

வயது


01.08.2024 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  SC/ST, OBC  பிரிவுகள்,  மாற்றுத் திறனாளிகளுக்கு  வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு


கணினி வழியில் முதல்நிலை தேர்வு , முதன்மைத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?


https://ssc.gov.in/  என்ற இணையதள பக்கத்தில்  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.  SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  கிடையாது.

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://ssc.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகவும்.
 





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw