காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கோர விபத்து- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 9 months ago

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கோர விபத்து- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பயணிகள் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து கணுவாய் வரை சப்தகிரி என்ற தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம் போல் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதற்காக சப்தகிரி பேருந்து வந்துள்ளது. காந்திபுரம் பேருந்து நிலையத்திற்குள் வந்ததும் வரிசையில் பேருந்துகள் நிற்பதை பார்த்த ஓட்டுநர் பேருந்தை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றுள்ளார்.

அப்போது பிரேக் செயலிழந்த நிலையில் அதிர்ச்சிக்குள்ளான ஓட்டுநர் செய்வதறியாது பேருந்துகளின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை இடது புறம் திருப்பினார். கட்டுப்பாட்டை இழந்து சென்று கொண்டிருந்த பேருந்து, பேருந்து நிலையத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மையதடுப்புகளை உடைத்துக் கொண்டு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது அதிவேகமாக மோதியது.

இதில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் 10 பேரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அதிகாலை நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அதிவேகமாக பயணிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/w3j4e2JFhkU?si=v2Ag-YNGuNqt9Tn2

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe