தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் டிஎன்ஏ கைரேகையின் அடிப்படைகள் குறித்த பயிற்சி...

published 9 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் டிஎன்ஏ கைரேகையின் அடிப்படைகள் குறித்த பயிற்சி...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையத்தின் தாரை உயிரித் தொழில்நுட்பத் துறையில்  இன்றும் நாளையுன் டி என் ஏ கைரேகையின் அடிப்படைகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மராத்வாடா வேளாண்மைப் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் எம்.எஸ்சி மற்றும் பிஎச்டி மாணவர்கள் அடங்கிய இந்தப் பயிற்சித் திட்டத்தில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மொத்தம் 17 பேர் கலந்துகொண்டனர்.

பயிற்சி நிகழ்ச்சியை சிபிஎம்பி இயக்குனர் டாக்டர் என்.செந்தில் துவக்கி வைத்தார். தாவர உயிரி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் இ.கோகிலாதேவி வரவேற்றார். சிபிபிஜி இயக்குநர் டாக்டர் ஆர்ரவிகேசவன் சிறப்புரையாற்றினார். இதில் மூலக்கூறு குறிப்பான்களின் அடிப்படைகள் மற்றும் டிஎன்எ கைரேகையில் அவற்றின் பயன்பாடுகள் குறித்து பொருள் நிபுணர்களால் தொடர்ச்சியான விரிவுரைகள் வழங்கப்பட்டன. டிஎன்ஏ பிரித்தெடுத்தல் நெறிமுறைகள், கலப்பின அடையாளம் மற்றும் தாவர வகைகளின் கைரேகைக்கான PCR நுட்பங்கள் ஆகியவற்றில் அனுபவம் அளிக்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் மரபணு வேறுபாடு பகுப்பாய்விற்காக NTSys மென்பொருளில் பயிற்சி பெற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe