கோவையில் உதவி பேராசிரியர் வேலை: ரூ.55,000 வரை சம்பளம்... நேர்காணல் மட்டுமே!

published 9 months ago

கோவையில் உதவி பேராசிரியர் வேலை: ரூ.55,000 வரை சம்பளம்... நேர்காணல் மட்டுமே!

கோயம்புத்தூர் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி (Sardar Vallabhbhai Patel International School Of Textiles & Management) சார்பில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடங்கள்

Assistant professor in Management, Assistant professor in Business Analytics, Assistant Professor in Computer Science & Engineering,  Assistant professor in Textile,  Assistant professor in English, Junior Engineer - Civil ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி

இந்த பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் M.Sc. / M.E./ MCA / MBA / BE / PGDM போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

சம்பளம்

இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.33,000 முதல் ரூ.55,000 வரை மாத சம்பளம்  வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

அதிகாரப் பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள  விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சலுக்கு  அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி  10.06.2024 ஆகும்.

தேர்வு  முறை

நேர்முக தேர்வின்  மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

மேலும் தகவல்

இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு https://drive.google.com/file/d/1c6Uq53PTb-mIpDPCvdrwgX6ec2ZxPGAA/view என்ற  அதிகாரபூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe