கோவை வரும் ரயில்களின் நேரம், சேவையில் மாற்றம்!

published 9 months ago

கோவை வரும் ரயில்களின் நேரம், சேவையில் மாற்றம்!

கோவை: பொறியியல் பணிகள் காரணமாக கோவை வரும் ரயில்களின் நேரம் மற்றும் இயக்கங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தென்னகரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூர் - கோயம்புத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள வஞ்சிபாளையம் ரயில்வே யார்டில் பல்வேறு பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது.

அந்த பணிகளை எளிதாக்கும் வகையில், கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

A.  பின்வரும் ரயில் சேவை வரும் 24 & 26 தேதிகளில் குறுகியதாக இருக்கும்

·         ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி ஜங்சன்- பாலக்காடு டவுன் ரயில் 24.05.2024 & 26.05.2024 ஈரோடு - திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ஈங்கூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.  
இந்த ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து ஈங்கூர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும். பாலக்காடு நகருக்கு இயக்கப்படாது.

B.  பின்வரும் ரயில் சேவைகள் 28 & 30ம் தேதி அன்று ஒழுங்குபடுத்தப்படும் / திருப்பி விடப்படும்

1.    ரயில் எண்.18190 எர்ணாகுளம் ஜங்சன் - டாடாநகர் ஜங்சன் 28 & 30ம் தேதிகளில் வசதியான ஏதேனு ஒரு இடத்தில் 1 மணிநேரம்  நிறுத்தி செல்லப்படும்.

2.    ரயில் எண்.13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் 28 & 30 தேதிகளில் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும்.  இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில் நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

3.    ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜங்சன் - கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 28 மற்றும் 30 ம் தேதிகளில் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும்.  இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில்  நிற்காது.  அதற்கு பதிலாக போத்தனூர் ரயில்  நிலையத்தில் நின்று செல்லும்.

இவ்வாறு தென்னகரயிலே அறிவ்ப்பு.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe