'இந்தியன் 2' படத்தின் முதல் பாடல் ரிலீஸ்! - வீடியோ உள்ளே!

published 8 months ago

'இந்தியன் 2' படத்தின் முதல்  பாடல் ரிலீஸ்! - வீடியோ உள்ளே!

அனிருத் இசையமைப்பில்  'இந்தியன் 2' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2  படம் தயாராகி வருகிறது. லைகா நிறுவனம்  படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  

சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர்,  சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ்,  காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தியன் 2 படத்தில்  நடித்துள்ளனர்.

Kamal Haasan's 'Indian 2' to release on July 12, 1st single to be out on  May 22 - India Today

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்  உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில்  திரையரங்க வெளியிட்டு உரிமத்தை ரெட் ஜயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,  ஜூலை மாதம் 17ம்  தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

இந்தியன் 2 படத்தின் முதல் பாடலுக்கான ப்ரமோ நேற்று  வெளியாகிய நிலையில், இன்று முழு பாடல் வெளியானது. 'பாரா' எனத் தொடங்கும் இந்தப் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். 

 

'இந்தியன் 2' படத்தின் முதல் பாடலை காண லிங்கை க்ளிக் செய்யவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe