கோவையில் ரசாயன பொட்டலங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்...

published 8 months ago

கோவையில் ரசாயன பொட்டலங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்...

கோவை: மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார நலத் துறை கூடுதல் செயலாளர்  ஆணையின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியரின்  அறிவுறுத்தலின் படி, மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு, கோவை மாநகரில் பகுதியில் ஆய்வு செய்தனர்.

மாநகரில் உள்ள வைசியால் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதி- I. பவள வீதி-II, கருப்ப கவுண்டர் வீதி, கெம்பட்டி காலனி வீதி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏழு குழுவாக மொத்தம் 14 பேர் அடங்கிய குழுவினர் மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த கள ஆய்வின் போது குடோன்கள் மற்றும் மொத்த விற்பனை கடைகள் என மொத்தம் 55 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 15 குடோன்கள் மற்றும் 16 மொத்த விற்பனை கடைகளில் சிறிய இரசாயன பொட்டலங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து, பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார்  16.1 டன் எடையும், மேலும் சுமார் 100 kg எடை அளவு உள்ள விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழுகிய ஆப்பிள் என மொத்தம் 16,207 kg எடை பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் மாநகராட்சி குப்பைகிடங்கில் உள்ள உரம் தயாரிக்க வைக்கப்பட்டுள்ள கிடங்கில் கொட்டி அழிக்கபட்டு, அதன் பின்னர் அதனை உரமாக தயாரிக்க முழுவதுமாக அரைக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை
மதிப்பு, சுமார் ரூபாய் 12,91,560. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து 21 மொத்த விற்பனை கடைகள் மற்றும் குடோன்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் (Notice) நோட்டிஸ் வழங்கப்பட உள்ளது. மேலும் இது போன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில் செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்திய இரசாயன பாக்கெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe