செல்லக் குட்டிகளுடன் ராஷ்மிகா... வைரலாகும் போட்டோஸ்!

published 8 months ago

செல்லக் குட்டிகளுடன் ராஷ்மிகா... வைரலாகும் போட்டோஸ்!

நடிகை ராஷ்மிகா செல்ல பிராணிகளுடன் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது இவை வைரலாகி வருகின்றன.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் காத நாயகியாக  அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.  தொடர்ந்து தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக   கீதா கோவிந்தம்,   டியர் காம்ரேட் என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களில் நடித்தார். இதன்   மூலம் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து,  ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பை பெற்றார்.

தமிழில்  நடிகர் கார்த்திக் உடன்  ஜோடியாக   சுல்தான், விஜய்க்கு ஜோடியாக   வாரிசு படத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் ராஷ்மிகாவை  பிரபலப்படுத்தியது. மேலும் பாலிவுட்டில் குட் பாய் படம், மிஷன் மஜ்னு, அனிமல் படத்தில் நடித்தார்.  

அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை  இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

 

அந்த வகையில், தற்போது  தனது நாய் குட்டி மற்றும் பூனை குட்டிகளை கையில் ஏந்தி கொஞ்சும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவை தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe