ரயில்வே வேலைவாய்ப்பு: பயண சீட்டு உதவியாளர் பணி... விண்ணப்பங்கள் வரவேற்பு!

published 8 months ago

ரயில்வே வேலைவாய்ப்பு:  பயண சீட்டு உதவியாளர் பணி... விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரயில் நிலையங்களில்  தானியங்கி இயந்திரங்களில் பயணச்சீட்டு விற்க உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பயண சீட்டுகள் பெற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு வந்தார்கள். இதுவரை இந்த பணியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே ஈடுபட்டு இருந்தனர்.  தற்போது பொதுமக்களும் ரயில் பயணச்சீட்டு விற்க தானியங்கி இயந்திரங்களில் உதவியாளர்களாக பணியாற்றும்  வாய்ப்பு தர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த உதவியாளர்களுக்கு அவரது முயற்சியால் விற்கப்பட்ட மொத்த பயண சீட்டு கட்டணத்தில் 3 சதவீதம் கமிஷனாக வழங்கப்படும். இவர்கள்  ஓராண்டு காலத்திற்கு  பணியில் இருப்பார்கள்.

திண்டுக்கல், பழனி, காரைக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், மானாமதுரை, கல்லிடைக்குறிச்சி, கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், புதுக்கோட்டை, சாத்தூர், செங்கோட்டை, மதுரை, திருச்செந்தூர், தூத்துக்குடி, போடிநாயக்கனூர் மற்றும் புனலூர் ரயில் நிலையங்களுக்கு தானியங்கி இயந்திரங்களில் பயணச்சீட்டு விற்க உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 11  ஆகும்.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் மேல் விவரங்களை அறிந்து கொள்ள  https://sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe