கலாக்ஷேத்ராவில் ஆசிரியர் வேலை: கல்வி தகுதி என்ன... முழு விவரம் இங்கே!

published 8 months ago

கலாக்ஷேத்ராவில் ஆசிரியர் வேலை: கல்வி தகுதி என்ன... முழு விவரம் இங்கே!

கலாக்ஷேத்ரா நடனம் மற்றும் நாட்டியப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.  

காலியிடங்கள்

Bharatanatyam - 5, Vocal - Carnatic Music - 6, Veena –Carnatic Music - 2, Mirudangam- Carnatic Music - 3, Violin - Carnatic Music - 1 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதி

இசை அல்லது நாட்டிய பிரிவில் கலாக்ஷேத்ராவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க  வேண்டும்.  வேறு இசைக்கல்லூரிகளில் பட்டம் பெற்ற நபர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  

சம்பளம்

இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000 - 36,000 வழங்கப்படும்.

மொழிப்பாட ஆசிரியர் காலியிடங்கள் 

Tamil - 1, English - 1, Telugu - 1, Sanskrit - 1 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதி

சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம்  இருக்க வேண்டும்.

சம்பளம்

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆசிரியர் பணிக்கு மாதம் ரூ.15,000 - 20,000 மற்றும் சமஸ்கிருதம் ஆசிரியர் பணிக்கு ரூ.30,000 வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

www.kalashetra.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.  சான்றிதழ் நகல்களை இணைத்து  கீழ்கண்ட  அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.  

அஞ்சல் முகவரி: The Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai-600 041

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள https://kalkbuckmedi21.s3.ap-south-1.amazonaws.com/2024/05/Advertisment-for-filling-up-faculty-positions-on-contract-basis-for-the-AY-2024-2025.pdf என்ற அறிவிப்பை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe