பிரதமராவீர்களா? செய்தியாளர்கள் கேள்வி... வெற்றிக்களிப்பில் ஸ்டாலின் கொடுத்த பதில்!

published 8 months ago

பிரதமராவீர்களா? செய்தியாளர்கள் கேள்வி... வெற்றிக்களிப்பில் ஸ்டாலின் கொடுத்த பதில்!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தி.மு.க., தலைமையகத்திற்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

40க்கு 40 என்ற வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்தோடு இந்த வெற்றியை தமிழக மக்கள் தந்துள்ளார்கள்

400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறி, யாருமே எங்களுக்கு எதிரி இல்லை என்ற பிம்பத்தை பா.ஜ.க.,வினர் ஏற்படுத்தினார்கள்.

ஆனால், இப்போது ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களைக்கூட பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியான தாக்குதல் தொடுத்தனர். பா.ஜ.க.,வின் பண பலம், அதிகார துஷ்பிரயோகத்தை உடைத்தெறிந்து பெற்றிருக்கும் இந்த வெற்றி, வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக உள்ளது.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பின் வெளியான பிறகு அரசியல் சாசனம், ஜனநாயகம் காக்கும் செயல்களை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும். கலைஞர் கருணாநிதிக்கு இந்த வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன். 

தாமரை மலரும் என்றார்கள். ஆனால், மலராமல் போனது. மோடியின் எதிர்ப்பு அலை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ளது.

தமிழகத்தில் முழுமையாக மோடி எதிர்ப்பு அலை இருப்பதற்கு இது எடுத்துக்காட்டு. திருக்குறளை பாராட்டுவதெல்லாம் மக்களை ஏமாற்றப் பேசியவை. ஒடிசாவில் சென்று அவர் என்ன பேசினார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.

நாளை இந்தியா கூட்டணிக்கட்சியின் தலைவர்கள் டில்லியில் கூடுவார்கள், நானும் அங்கு செல்கிறேன்.

என்று கூறினார்.

பெரும்பான்மை ஏற்படும்பட்சத்தில் பிரதமர் வேட்பாளராக உங்களை நிறுத்துவார்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "என் உயரம் எனக்குத் தெரியும். தேர்தல் முடிவுகள் முழுமையாக வரவில்லை. வெளிவந்த பிறகு அந்த கருத்து குறித்து பேசலாம்." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe