தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் ஒருங்கிணைந்த இளமறிவியல் மாணவர் சேர்க்கை...

published 8 months ago

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் ஒருங்கிணைந்த இளமறிவியல் மாணவர் சேர்க்கை...

கோவை: இந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் (TNAU). தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் (TNJFU) மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் (AU) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

இக்கல்வியாண்டில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும். 4 பட்டயப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் மூன்று தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இளமறிவியல் (வேளாண்மை) மற்றும் இளமறிவியல் (தோட்டக்கலை) பாடப்பிரிவுகளுக்கு ஒருமித்த வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 5361 இடங்களுக்கும். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு 371 இடங்களுக்கும் மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் 340 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்..

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல்
பட்டயப் படிப்புகளுக்கு 1290 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்..

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 07.05.2024 முதல் இணையதள வாயிலாக http://tnagfi.ucanapply.com இந்த ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெற்று வருகிறது. பூர்த்தி செய்த இந்த ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு 12.06.2024 இறுதி நாளாகும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe