கோவையில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…

published 8 months ago

கோவையில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…

கோவை: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் அஸ்தாப் அலி(29). இவர் கோவை சரவணம்பட்டி பெருமாள் நகர் பகுதியில் உறவினர்களுடன் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அங்குள்ள கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். 

அப்போது அவர் நிலைதடுமாறி கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். 

விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்து விட்டு அஸ்தாப் அலி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe