இரவிங்கு தீவாய் நம்மைச் சூழுதே.. ஜொலிக்கும் உக்கடம் மேம்பாலம்! புகைப்படங்கள்!

published 8 months ago

இரவிங்கு தீவாய் நம்மைச் சூழுதே.. ஜொலிக்கும் உக்கடம் மேம்பாலம்! புகைப்படங்கள்!

கோவை: உக்கடம் மேம்பாலம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த உக்கடம்- ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரூ.481 கோடி செலவில் 2018-ம் ஆண்டு முதல் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. முதற்கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை வரை முதல் கட்டமாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்துப்பாலம் முதல் பொள்ளாச்சி,பாலக்காடு சாலைகளில் 2-வது கட்டமாக மேம்பால பணிகள் நடைபெற்றது.

2-ம் கட்ட மேம்பாலம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. முதலில் மந்த நிலையில் நடந்த மேம்பால பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

தற்பொழுது மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதை ஒட்டி விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. மேலும் மேம்பாலத்துக்கு மேல் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு தற்போது மேம்பாலம் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது.

விரைவில் மேம்பாலத்தைத் திறந்து வைத்தால் போக்குவரத்து நெரிசல் இன்றி பொள்ளாச்சி, பாலக்காடு சாலைக்கு விரைந்து செல்லலாம் என்று பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe