பக்ரீத் பண்டிகை: கோவையில் சிறப்பு தொழுகை!

published 8 months ago

பக்ரீத் பண்டிகை: கோவையில் சிறப்பு தொழுகை!

கோவை: பக்ரீத் பண்டிகையை ஒட்டி கோவை குனியமுத்தூரில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

இஸ்லாத்தில் உள்ள 5 கடமைகளை முஸ்லீம்கள் கடைபிடிக்க வேண்டும். அப்படி, 5வது கடமையான ஹஜ் பயணத்தின் போது பிறை 10ல் கொண்டாடப்படுவதே பக்ரீத் பண்டிகை.

பக்ரீத் பண்டிகையின் போது இறைத்தூதர் இப்ராஹிம் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக கால்நடைகளை குர்பானி கொடுத்து அதனை ஏழை மக்கள்,  உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து மன நிறைவு பெறுவது வழக்கம்.

அந்த வகையில், உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

புத்தாடைகள் அணிந்து திடல் போன்ற திறந்த வெளிகளில் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.

கோவையில், குனியமுத்தூர் ஆயிஷா மஹால் வளாகத்திப் ஜாக் அமைப்பு சார்பில் இன்று காலை 6.45 மணியளவில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

பின்னர் இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் வீடுகளில் ஆடு,மாடு ஆகியவற்றை பலியிட்டு அவற்றை 3 பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும்,3-வது பங்கை தங்களுக்கும் எடுத்துக்கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe