கோவையில் 3 ஆயிரம் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பயிற்சி!

published 8 months ago

கோவையில் 3 ஆயிரம் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பயிற்சி!

கோவை: வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மையில் (சிஆர்எம்) முன்னணி நிறுவனமான சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கோவையில் நேற்று நடைபெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி கமல்காந்த் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் சேல்ஸ்போர்ஸின் முதல் 5 வளர்ந்து வரும் சந்தைகளில் கோவை முதன்மையாக உள்ளது. கோவை மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள வாடிக்கை நிறுவனங்களுக்கு டிஜிட்டல் உத்திகளை உருவாக்க துணை புரிகின்றன.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் "நான் முதல்வன்" முயற்சியை ஆதரிப்பதில் சேல்ஸ்போர்ஸ் பெருமிதம் கொள்கிறது. 3 ஆயிரம் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு டெவலப்பர் பயிற்சியை வழங்குகிறது.

இந்த ஆண்டு, பொறியியல் கல்லூரிகளில் 7வது செமஸ்டரில் ஒரு பகுதியாக சேல்ஸ்போர்ஸ் டெவலப்பர் பயிற்சியை வழங்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது. இதன்மூலம் மாணவர்களை வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தயார்படுத்துகின்றன.

கோவை உற்பத்தி மற்றும் ஜவுளிக்கான வளர்ந்து வரும் மையமாக மாறியுள்ளதால் புதுமை மற்றும் டிஜிட்டல் மாற்றம் அவசியம். எனவே அனைத்து விதமான வணிகங்களில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்த சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் ஒத்துழைக்கிறது.

தொழில் நிறுவனங்கள் - வாடிக்கையாளர்கள் தொடர்புகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் முன்னேற்றிட நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. எங்களது புதுமையான தீர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம் வணிக நிறுவனங்கள் அவர்களது செயல்திறனை மேம்படுத்தி வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe