கோவையில் தென்னை மரத்தில் ஏறிய வாலிபர் பலி யார் அவர்?

published 8 months ago

கோவையில் தென்னை மரத்தில் ஏறிய வாலிபர் பலி யார் அவர்?

கோவை: கோவை அருகே தென்னை மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அடுத்த துடியலூர் முத்துநகரை சேர்ந்தவர் பூபாலன். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் அவரது வீட்டு முன்பு நின்றிருந்த தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை கீழே இறங்கி வருமாறு சத்தம் போட்டனர்.

இதில் அந்த நபர் நிலைதடுமாறி சுமார் 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்பன போன்ற விவரங்கள் தெரியவரவில்லை.

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe