மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றிக்கொடி நாட்டிய கோவை பெண் போலீஸ்!

published 8 months ago

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றிக்கொடி நாட்டிய கோவை பெண் போலீஸ்!

கோவை: மாநில அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி மற்றும் மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வருகிறது.

"தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான மகளிர் காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி 08.06.2023 முதல் 09.06.2023 வரை நடத்தப்பட்டது. மேலும்,  15.06.2024 முதல் 20.06.2024 வரை தமிழ்நாடு காவல் துறையினரால் ‘மகளிர் காவலருக்கான சிறப்பு அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல் போட்டி’ செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், 13 விதமான போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவை ரைபிள் (5 போட்டிகள்), பிஸ்டல், ரிவால்வர் (4 போட்டிகள்) & கார்பைன் , ஸ்டென்கன் (4 போட்டிகள்)  பிரிவுகளில் அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியம் வழங்கிய சமீபத்திய விதிகள் மற்றும் விதிமுறைகளின் படி நடத்தப்பட்டு வருகிறது.

அகில இந்திய அளவில் பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கி சூடுதல் போட்டியில் கோவை ரயில்வே காவல் நிலைய பெண் தலைமை காவலர் ரூபாவதி என்பவர் 300 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe