இந்திய பருத்தி நிறுவனத்தில் வேலை: பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு!

published 8 months ago

இந்திய பருத்தி நிறுவனத்தில் வேலை: பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு!

இந்திய பருத்தி நிறுவனத்தில் 214 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.   மும்பையில் இயங்கும் இந்திய பருத்தி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாகவுள்ள 214 பணியிடங்களை நேரடி நியமனத்தில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்

அசிஸ்டெண்ட் மேனேஜர் (சட்டம்) - 1, அசிஸ்டெண்ட் மேனேஜர் (அங்கீகரிக்கப்பட்ட மொழி) - 1, மேனேஜ்மெண்ட் டிரைய்னி (மார்க்கெட்டிங்) - 11, மேனேஜ்மெண்ட் டிரைய்னி (கணக்கு) - 20, ஜூனியர் கமர்சியல் எக்சிகியூட்டிங் - 120, ஜூனியர் அசிஸ்டெண்ட் (பொது) - 20, ஜூனியர் அசிஸ்டெண்ட் (கணக்கு) - 40, ஜூனியர் அசிஸ்டெண்ட் (ஹந்தி மொழிபெயர்பாளர்) - 1 என மொத்தம் 214 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி

மேலே குறிப்பிட்ட பணியிடங்களுக்கு வணிகம், விவசாயம், சட்டத்தில் டிகிரி, சிஏ/டிஎம்ஏ படித்தவர்கள், வணிக விவசாயத்தில் எம்பிஏ மற்றும் ஹந்தியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

தேர்வு

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://cotcorp.org.in/?AspxAutoDetectCookieSupport=1  என்ற  இணையத்தளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க கடைசி நாள் 02.07.2024 ஆகும்.

கூடுதல் விவரம்

இந்த பணியிடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/12/1111323155850324371405.pdf அறிவிப்பை படிக்கவும். இதில் கூறியுள்ள தகவல்களை படித்து விட்டு, பணிக்கு விண்ணப்பம் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe