கோவையில் மழை நீரை அகற்ற 100 பணியாளர்கள் நியமனம்..!

published 2 years ago

கோவையில் மழை நீரை அகற்ற 100 பணியாளர்கள் நியமனம்..!

கோவை: கோவை மாநகரில் மேம்பாலங்கள் மற்றும் மழைநீர் அதிகம் தேங்கும் இடங்களில் 15 எச்பி திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு 100 பணியாளர்கள் மாநகராட்சி மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநகரில் உள்ள கிக்கானி ரயில்வே சுரங்க மேம்பாலம், லங்கா கார்னர் பாலம், அவினாசி மேம்பாலம் கீழ் பகுதி, சிவானந்தாகாலனி, வடகோவை மேம்பாலம் கீழ் பகுதி, சங்கனூர் ஓடை பகுதிகள் அருகில் உள்ள சாலைகள் போன்றவற்றில் மழைநீர் தேங்குகிறது. இதனை அகற்றவும் மேலும் மழைநீர் தேங்காத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.


இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சி சார்பாக மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தேவைக்கு ஏற்ப 15 எச்பி திறன் கொண்ட மோட்டார்கள், பம்புகள், போதுமான உபகரணங்கள் மற்றும் மாநகர் முழுவதும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மூலம் மழைநீர் அகற்றப்பட்டு வருகின்றன. விரைவில் மழைநீர் தேங்கும் இடங்களில் இனி மழை காலங்களில் மழைநீர் தேங்காதவாறு அதற்கேற்க திட்ட அறிக்கை தயாரித்து பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe