கோவை மக்களே! உங்க ஏரியாவில் இருக்கிறதா சாலை ஆக்கிரமிப்பு; அழைக்கிறது போலீஸ்!

published 8 months ago

கோவை மக்களே! உங்க ஏரியாவில் இருக்கிறதா சாலை ஆக்கிரமிப்பு; அழைக்கிறது போலீஸ்!

கோவை: கோவை மாநகரில் சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகர் காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் பாலகிருஷ்ணன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பணிகளை கடந்து, மக்கள் மத்தியில் வாசிப்புத்திறனை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

இதனிடையே, சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகர காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகர போலீசார் கூறியதாவது:

வாகனப்போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் நடமாட்டத்திற்கு தடங்குதலாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநகர காவல்துறை.

கோவை மேற்கு போக்குவரத்துப்பிரிவு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20 இடங்களிலும், கோவை கிழக்கு போக்குவரத்துப்பிரிவு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 11 இடங்களிலும், என மொத்தம் 31 இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு பொதுமக்கள் உபயோகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் அல்லது கோவை மாநகரில் சாலை ஆக்கிரமிப்பு சம்மந்தமாக தகவல் ஏதேனும் இருந்தால் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண். 9498181213 அல்லது 8190000100 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ அல்லது 0422 - 2300970 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு அல்லது கோவை மாநகர காவல்துறையின் @policecbecity என்ற X வலைதள கணக்கிற்கோ அல்லது Coimbatore City Police என்ற பேஸ்புக் பக்கத்திலோ தகவல் அளிக்கலாம்.

இவ்வாறு காவல்துறை அறிவித்துள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe