கோவை வாசிகளே! ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கு விற்பனையாகும் மா மரக்கன்றுகள் வேண்டுமா?

published 8 months ago

கோவை வாசிகளே! ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கு விற்பனையாகும் மா மரக்கன்றுகள் வேண்டுமா?

கோவை: ஒரு கிலோ ரூ.3 லட்சம் வரை விற்பனையாகும் மியா சகி மா மரக்கன்றுகள் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்ப்டடுள்ளது.

இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:

தற்சமயம் மியா சகி மா மாம்பழம் ஒரு கிலோ ரூ.2.5 முதல் ரூ.3 லட்சம் வரை விலை போகின்றது. இதில் அதிகஅளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட், பீட்டா கரோட்டின் போலிக் ஆசிட் மற்றும் விட்டமின் A & C மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன.

ஜப்பான் நாட்டின் அரிய வகை மா மரம் மியா சகி இந்தியாவில் பரவலாக  பல  மாநிலங்களில்  காய்க்க துவங்கியுள்ளது.

முக்கனி திருவிழாவிற்கு வருகை தரும் பதிவு செய்த ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மா மரக்கன்று கொடுப்பதற்கு  உத்தேசித்துள்ளோம்.

தற்சமயம் ஒருவருக்கு ஒரு மரக்கன்று மட்டும் வழங்க வாய்ப்பு உள்ளது எதிர்காலத்தில் உங்கள் அதிக தேவையை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றோம்.

மார்க்கெட்டில் ரூ.3,000 வரை  விற்கக்கூடிய இம் மரக்கன்றை நாம் நேரடியாக இறக்குமதி செய்து ஒரு மரக்கன்று 300 ரூபாய்க்கு வழங்க உள்ளோம். நிகழ்வில் கலந்து கொள்வார்களுக்கு மட்டும் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்கில் உங்கள் பெயர் முகவரியை பதிவு செய்யவும்...

https://forms.gle/z6XzwcuG5GhXjmjb8

அல்லது அழைக்கவும் 94425 90081/94425 90079

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe