பொள்ளாச்சி அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகனம்.

published 2 years ago

பொள்ளாச்சி அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகனம்.

கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் ஆழியார் அணையிலிருந்து இன்று 11 மதகுகள் வழியாக உபநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் அம்பராம்பாளையம் -  பொள்ளாச்சி ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் வருகிறது.

இதைத்தொடர்ந்துமீனாட்சிபுரம் மற்றும் கோபாலபுரம் வழியாகச் செல்லும் பாலத்தில் அதிகமாக பாலம் மூழ்க்கும்படி நீர் செல்கிறது,பாலத்தைக் கடக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக கடக்கும்படி காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை திடீரென வெள்ளம் அடித்து சென்ற வீடியோ தற்பொழுது வாட்ஸ் அப்பில் வைரலாக உள்ளது.

மேலும் பொதுமக்கள் பாலத்தைக் கடக்கும்போது கவனமாகச் செல்லுமாறு காவல்துறையினர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒளிபரப்பு மூலம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe