தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பொய்யாக பேசுகிறார்கள் - அண்ணாமலை பேட்டியளித்த வீடியோ காட்சிகள்...

published 7 months ago

தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பொய்யாக பேசுகிறார்கள் - அண்ணாமலை பேட்டியளித்த வீடியோ காட்சிகள்...

கோவை: கோவை சித்ரா பகுதியில் உள்ள  இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளரை சந்தித்தார். 

அப்போது பேசிய அண்ணாமலையிடம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் படிப்பதாக செய்திகள் வருவது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, அதிகாரப்பூர்வமாக பேச வேண்டிய நேரத்தில் பேசுவதாகவும் தற்போது கட்சியின் உறுப்பினராக இருப்பதாகவும்  கட்சி முடிவெடுக்கும் எனவும் கட்சிக்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்து இருக்கிறேன், ஆகையால் எந்த நேரத்தில் கூற வேண்டுமோ அந்த நேரத்தில் தெரிவிப்பேன் என பதிலளித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக நாம் தமிழர் கட்சியினர் அதிமுகவின் வாக்குகள் தங்களுக்கு விழும் என கூறுவதும் திமுக தரப்பில் அமைச்சர் எ.வ வேலு, எம்ஜிஆர் தொண்டர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என கூறுவது தொடர்பான கேள்விக்கு, விக்கிரபாண்டி இடைத்தேர்தலில் திமுக அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம் எனவும் ஆட்சியில் ஒரு கட்சி இருக்கிறது, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முடித்து விட்டார்கள், அப்போது  கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் வெற்றி பெற வேண்டும், இது திராவிட மாடல் ஆட்சி எனக் கூறுபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு வெற்றி பெற வேண்டும், ஆனால் இடைத்தேர்தலில்   தெருத்தெருவிற்க்கு திமுகவினர், அமைச்சர் என ஈரோடு இடைத்தேர்தலில் மாடலை ஆரம்பித்துவிட்டார்கள் எனவும் தங்களைப் பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலில்  திமுக என்ன வேலை செய்தாலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திமுகவினரும் வந்து வேலை செய்தாலும் கூட, தேர்தல் முடிவு என்பது அதிர்ச்சியாக தான் இருக்கும்  என பதிலளித்தார். மேலும் தங்களைப் பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்  அன்புமணி எளிமையான மனிதர்,  அங்கேயே இருப்பவர், இதற்கு முன்பு போட்டியிட்டவர்,4-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் எனவும், தான் 5,6 தேதி முழுவதும் பாஜக சார்பில் தங்களது பிரச்சாரம் இருக்கிறது, பாஜக தேர்தல் பணிக்குழு முழுமையாக அர்ப்பணித்து வேலை செய்து வருகிறார்கள் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அண்ணாமலை இன்றைக்கு திமுகவினர் அவர்களின் வாக்குகளை நம்பாமல் களத்தில் நிற்காத கட்சி ஓட்டை கூவிக்கூவிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், நீங்கள் கொடுங்கள் என திமுகவும் மற்றொரு கட்சியிலும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்தவர், விக்ரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சியின் கள்ளச்சாராய மரணம் எதிரொலிக்கும் என தெரிவித்தார்.

லண்டன் மேயர், நியூயார்க் மேயர் என மேயர் என்பது போன்று மேயர் ஒரு அற்புதமான பொறுப்பு எனவும் பெரிய ஆளுமை மிக்க தலைவர்கள் அந்த பொறுப்பில் அமர்வார்கள் எனவும் சென்னை ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது எனவும் ஆனால் திமுக வந்த பிறகு அந்த அலுவலகத்தையே குட்டிச்சுவரு செய்து, சரியான முறையில் மூன்று வரி தாய்மொழி தமிழை படிக்க முடியாதவர்கள் மேயராக இருக்கிறார்கள் எனவும் இன்றைக்கு மேயர் என்ற பொறுப்பையே கொச்சைப்படுத்தி இருக்கிறது திமுக அரசு என குற்றம்சாட்டியவர், மேயர்களை டம்மியாக வைத்துக் கொண்டால் அமைச்சருக்கு பிரச்சனை இருக்காது, சட்டமன்ற உறுப்பினருக்கு பிரச்சினை இருக்காது, இன்னொரு அதிகாரம் மையம் அங்கே உருவாகாது, இதுதான் திமுக எனவும் தமிழகத்தில் மேயர் என்ற பொறுப்பையே உதாசீனப்படுத்தி சின்னாபின்னமாக்கியிருக்க கூடிய திமுக யாரை மேயாரா போட்டால் என்ன?  மக்கள் அந்த மனநிலையில் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

எந்த ஊரில் எந்த மேயர் வேலை செய்கிறார்கள், திருநெல்வேலி வெள்ளம் வரும்போது மேயரை காணவில்லை எனக் கேட்டால், சேலத்தில் இளைஞர் அணி மாநாட்டுக்கு பந்தல் போட்டுக் கொண்டிருக்கிறார், இதுதான் தமிழகத்தில் பல மேயர்களின் கதை எனவும் சென்னை மேயர் வண்டியில் ஏறி சைடில் தொற்றிக் கொண்டிருக்கிறார், அந்த பொறுப்புக்கு இருக்க கூடிய கம்பீரமும் அதிகாரமும் திமுக ஆட்சியில் முழுமையாக செயலிழந்து விட்டது என குற்றம் சாட்டினார்

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, நாடாளுமன்றத்தில் காரசார விவாதத்துக்கு காரணம், ராகுல் காந்தியிடம், யார் பொய் பேசுகிறார்களோ அவர்கள்தான் எதிர்க்கட்சித் தலைவர் என யாரோ கூறிவிட்டார்கள், அதனால் முழுமையாக தன்னை தயார்படுத்திக்கோண்டு பொய்யாக பேசிக் கொண்டிருக்கிறார் என விமர்சித்தார். மேலும் அக்னிவீர் திட்டத்தில் இறந்த  குடும்பத்துக்கு 1.10 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக அமைச்சர் ராஜநாத் சிங் கூறியதை சுட்டிக்காட்டியதோடு, ராகுல் காந்திக்கு என்ன இந்து பாரம்பரியம் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செங்கோல் குறித்த கருத்துக்கு பதில் அளித்த அண்ணாமலை, மேயருடன் செங்கோல் பிடித்த புகைப்படத்தை காட்டி, இதைத்தான் பாராளுமன்றத்தில் சூ வெங்கடேசன் பேசுகிறார்கள் எனவும் இவ்வாறு தான் தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பொய்யாக பேசுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு காரணம், திமுகவும் காங்கிரசும் தான் எனவும் மிக முக்கியமாக பிடிபட்ட மீனவர்கள் யாராக இருந்தாலும் வேகமாக திரும்ப அழைத்து வருகிறோம் எனவும் அதிகபட்சமாக 14 நாட்களில் சிறையில் இருந்து மீட்டு வருகிறோம் எனவும் படகுகளை மீட்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்த அண்ணாமலை, முதலமைச்சர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி கச்சத்தீவு தொடர்பாக மீண்டும் பொய் பேசுவதாகவும், கச்சத்தீவு யார் கொடுத்தார்கள்?  எனவும் தான் பாஜக தலைவராக வெளியுறவுத்றை அமைச்சருக்கு தான் கடிதம் எழுதி இருப்பதாகவும், கச்சத்தீவை கண்டிப்பாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் இருப்பதை அதிகாரப்பூர்வமாக எழுதியிருக்கிறோம் எனவும் குறிப்பிட்டவர் முள்ளின் மேல் சேலையை போட்ட பிறகு ஒரே நாளில் அந்த சேலையை எடுக்க முடியாது எனவும் டிப்ளோமேட்டிக் பிரச்சனை இருக்கிறது, எத்தனை ஆண்டுகளாக பேசாமல் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறோம், ஆர்ட்டிகல் ஐந்து மற்றும் ஆறு இரண்டும் போய்விட்டது, மீண்டும் அந்த சரத்தை கொண்டு வர வேண்டும், அதனால் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் மற்றும் அறப்போராட்டங்களை கைவிட வேண்டும், அனைத்து முயற்சிகளையும் தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும், பிரதமர் மோடி மற்றும் பாஜக மீனவர்களுடன் இருப்பதாக  வேண்டுகோள் விடுத்தார்

தற்போது வழங்கப்பட்டுள்ள சட்டங்களில் எந்த குறையும் இல்லை எனவும்  சட்டத்தின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டுமா? என்றால் அதற்கான முயற்சிகள் ஒவ்வொன்றாக தான் வரும், தாங்களும் கட்சிக்குள் சொல்லி இருக்கிறோம் எனவும் தலைவர்கள் கேட்டிருக்கிறார்கள், கண்டிப்பாக அது நடக்கத்தான் போகிறது எனவும் மோடி,அமித்ஷா அதை கொண்டு வரத்தான் போகிறார்கள், சட்டத்தில் எந்த குறையும் இல்லை, நன்றாக தான் இருக்கிறது எனவும் தெரிவித்த அண்ணாமலை மெக்காலே எழுதிய குற்றவியல் சட்டங்களை சுட்டிக்காட்டி, முதல் முதலாக மாற்றி நமக்கான ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் எனவும் இளையவர்கள் அரசியல்காக குறை சொல்லலாம் என தெரிவித்தார்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/m5vIUqSOTjE

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe