Microsoft நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை... வீட்டில் இருந்தே பணி செய்யலாம்!

published 7 months ago

Microsoft நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை... வீட்டில் இருந்தே பணி செய்யலாம்!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனம் Software Engineer வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வீட்டில் இருந்தே வேலை செய்ய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் இயங்கி வருகின்றன. தற்போது  பெங்களூரில் இயங்கி வரும் இந்த  நிறுவனத்தின் கிளையில்,  Software Engineer பணிக்கு வீட்டில் இருந்தே பணி செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில்  இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்புடைய டெக்னிக்கல் பிரிவில் சி, சி++, சி#, ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட், பைத்தான் உள்ளிட்டவற்றில் ஓராண்டில் பணியாற்றிய அனுபவம் பெற்றிக்க  வேண்டும். (மேலும் தகுதி மற்றும் அனுபவம் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்)

பணிக்கான சம்பளம்  குறிப்பிடப்படவில்லை.  அனுபவம், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க  கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. விருப்பம் உள்ளவர்கள் விரைவில்  மைக்ரோசாஃப்ட் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை அறிய லிங்கை க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe