Infosys வேலைவாய்ப்பு: சென்னையில் பணி... டிகிரி போதும்!

published 7 months ago

Infosys வேலைவாய்ப்பு: சென்னையில் பணி... டிகிரி போதும்!

சென்னை infosys நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியாகி உள்ளது.  Infosys BPM Limited நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. தற்போது இன்போசிஸ் பிபிஎம் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, Process Executive பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் 2018 முதல் 2024ம் ஆண்டுக்குள் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் எம்சிஏ, பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (கல்வி தகுதி விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.) 0 முதல் 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும்.  சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டி இருக்கும். ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிய வேண்டும்.

தேர்வாகும் நபர்கள் சென்னையில்  பணியமர்த்தப்படுவார்கள்.  சம்பளம் குறித்து  அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. மேலும் விண்ணப்பிக்க கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 
எனவே, விரைந்து விண்ணப்பம் செய்வது நல்லது.

விருப்பம் உள்ளவர்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பணி தொடர்பான  அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe