கோவையில் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம்- விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு...

published 7 months ago

கோவையில் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம்- விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு...

கோவை: கோவை மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.


காரீப் பருவத்தில் பயிர்காப்பீடு செய்ய நெல்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.764 உளுந்து மற்றும் பச்சை பயறு பயிர்களுக்கு ரூ.308 மேற்கண்ட பயிர்களுக்கு கடைசி தேதி 31.07.2024 ஆகும். மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.744 சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.245 மற்றும் கொள்ளு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.308 ஆகும். மேற்கண்ட பயிர்களுக்கு 16.09.2024 வரை காப்பீடு செய்யலாம்.

மேலும், தோட்டக்கலை பயிர்களான கத்தரிக்காய் ஏக்கருக்கு ரூ.1170 வெங்காயம் ஏக்கருக்கு ரூ.1782 தக்காளி ஏக்கருக்கு ரூ.1495 கட்டணமாக செலுத்தி 31.08.2024 வரை காப்பீடு செய்யலாம். வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2939, மரவள்ளி பயிருக்கு ரூ.1720. மஞ்சள் ஏக்கருக்கு ரூ.722 மட்டும் கட்டணமாக செலத்தி 16.09,2024 வரை காப்பீடு செய்யலாம்.

பயிர்காப்பீடு செய்ய சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கிகணக்கு புத்தகம், ஆதார் அட்டையை எடுத்து சென்று அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக பயிர்காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகள் பாதுகாத்து பயன்பெற உடனடியாக பயிர்காப்பீடு செய்ய மேலும் ஏற்படும் சந்தேகங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்கமையத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அவர்கள் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe