கண்ணுக்குள் தேசியக்கொடியை ஓவியமாக வரைந்த கோவை நபர்..!

published 2 years ago

கண்ணுக்குள் தேசியக்கொடியை ஓவியமாக வரைந்த கோவை நபர்..!

கோவை: கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் கண்ணுக்குள் தேசியக் கொடியை ஓவியமாக வரைந்து வைத்து வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, பொதுமக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேரும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு நாட்டுப்பற்றை அதிகரிக்கச் செய்ய வரும் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்ற பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தேசியக் கொடியின் தியாகத்தை கொண்டு சேர்க்கும் வகையில் நூதனமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கோவை குனியமுத்தூரை சேர்ந்த யு.எம்.டி ராஜா தன் கண் விழிகளில் தேசியக்கொடியை வரைந்து வைத்துள்ளார்.

மேலும் இவர் இதற்காக முட்டை ஓட்டின் உள்பகுதியில் இருக்கும் வெள்ளை கருவின் மேல் உள்ள மிக மெல்லிய ஆடை போன்ற படலத்தை எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளார்.  

மேலும் பொதுமக்களிடையே தேசியக் கொடியின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதனை செய்ததாக தெரிவித்துள்ள அவர் கண்ணுக்குள் தேசியக்கொடி இருப்பது போன்ற வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe