குற்றவாளிகள் உருவாவது எதனால்? கோவையில் முன்னள் டி.ஜி.பி பேட்டி

published 7 months ago

குற்றவாளிகள் உருவாவது எதனால்? கோவையில் முன்னள் டி.ஜி.பி பேட்டி

கோவை: பொதுமக்களிடம் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக
கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பாக இந்திய மனநல மருத்துவ சங்கம் சார்பில்  மாரத்தான் போட்டி நடைபெற்றது. 3 கிலோமீட்டர், 5கிலோ மீட்டர்,10கிலோமீட்டர் என மூன்று பிரிவாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியினை முன்னாள் டி.ஜி.பி,ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஓடினர்.

இதனை தொடர்ந்து 
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் டி.ஜி.பி, ரவி,

மன நலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி இந்த மாரத்தான் நடைபெற்றது.போதை மருந்துக்கு அடிமையானவர்கள் களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மன நல ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.காவல்துறையின் நடவடிக்கையால் தமிழகத்தை பொறுத்தவரை போதை பதளக்கம் இப்போது குறைந்து கொண்டு வருகிறது.வெளி மாநிலங்களில் இருந்து வரும் போதை பொருட்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக
ஊடகங்கள்,திரைப்படங்களில்
வன்முறையை நல்ல விசியமாக சித்தரிக்கப்படுவதால் ஒரு சில இளைஞர்கள் பாதிக்கப்படலாம்.மனநலம் குன்றியவர்கள் தான் கொலையாளிகளாக மாறுகிறார்கள்.சமூக நலத்தை சரி செய்வதற்கு தான் போலீஸ் என்கவுண்டரை பயன்படுத்துகிறார்கள். காவல்துறையிடம் துப்பாக்கி இருப்பது மக்களை பாதுகாப்பதற்கும், குற்றவாளிகளுக்கு எதிராக,  சரியான திறன் வரும்போது பயன்படுத்துவதற்கு தான்.ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கி வைத்திருக்க கூடாது என்ற சுற்றறிக்கை வந்தது.தற்போது அது மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர். இது புது நடைமுறை அல்ல.

அரசியல் கொலை நடத்தப்படும் போது அது பெரிது படுத்தப்படும்.இது போன்ற நடவடிக்கை எடுக்கும்போது அது குறைந்த மாதிரி தெரியும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் போது பெண் தாதாக்கள் என்பது வரலாற்றிலிருந்து இருக்கிறது. இது புது விஷயம் அல்ல.காவல்துறை, அரசு அதிகாரிகளுடைய மன நலம்,உடல் நலம் நன்றாக இருக்கும் பட்சத்தில் மக்களுக்கு நன்றாக சேவை செய்ய முடியும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe