ஒரே நாளில் 2 முறை அதிரடியாகக் குறைந்தது தங்கம் விலை!

published 3 months ago

ஒரே நாளில் 2 முறை அதிரடியாகக் குறைந்தது தங்கம் விலை!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட நிலையில் தங்கம் விலை நேற்று மீண்டும் ஒரு முறை அதிரடியாக விலை குறைந்துள்ளது.

மத்தியில் பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த பின் முதன் முறையாக அமைச்சர் நிர்மலா நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அந்த வகையில், தங்கம் மற்றும் வெள்ளிக்கு சுங்கவரி 6% ஆக குறைக்கப்படுவதாக அறிவித்தார். பிளாட்டினத்திற்கு 6.4% ஆகவும் வரி குறைத்து அறிவித்தார்.

ஏற்கனவே நேற்று காலை நிலவரப்படி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 விலை குறைந்தது. வரி குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,080 குறைந்தது.

தற்போது ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராம் ரூ.6,550க்கும் ஒரு பவுன் ரூ.52,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1,704 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.5,578க்கும், பவுன் ரூ.42,920க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.10 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.92.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe