நாட்டின் வளர்ச்சியில் பெண்களுக்கு சம பங்கு உண்டு- கோவையில் பாலகுருசாமி பேச்சு...

published 3 months ago

நாட்டின் வளர்ச்சியில் பெண்களுக்கு சம பங்கு உண்டு- கோவையில் பாலகுருசாமி பேச்சு...

கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தனியார்) கலையரங்கில் இ.பி.ஜி., அறக்கட்டளை சார்பில், "பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்" என்ற இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு மாநாடு-2024 நடைபெற்றது. இது அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமியால் நடத்தப்படுகிறது.

இம்மாநாட்டில் பாலகுருசாமி தலைமை வகித்தார். மேலும் இதில், கோவை எஸ்.வி.பி.ஐ.எஸ்.டி.எம்., இயக்குநர் அல்லிராணி, பாலக்காடு ஐ.ஐ.டி., பதிவாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய பாலகுருசாமி, சுதந்திரம் அடைந்தும் இன்னும் நம்நாடு வளர்ந்து வரும் நாடாகவே தான் இருப்பதாகவும், இந்தியா வளர்ந்த நாடக மாறுவதற்கு பொருளாதர முன்னேற்றம் மட்டுமின்றி சமூக முன்னேற்றமும் வேண்டும் என்றார்.  

பெண்கள் முன்னேற்றம் என்பது மிக மிக அவசியம் என்றும் அதனை கருத்தில் கொண்டே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டின் வளர்ச்சியில் பெண்களுக்கும் சம பங்கு உண்டு என தெரிவித்தார்

இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe