இன்சூரன்ஸ் நிறுவனம் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை- கோவையில் அமைச்சர் உறுதி...

published 2 months ago

இன்சூரன்ஸ் நிறுவனம் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை- கோவையில் அமைச்சர் உறுதி...

கோவை: தனியார் மருத்துவமனையில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற எந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீதும் புகார் இருந்தால் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 
13 கோடி மதிப்பில்  2வது எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

கோவை அரசு மருத்துவமனையில் 13 கோடி செலவில் இரண்டாவது  MRI ஸ்கேன் இன்று திறக்கப்பட்டுள்ளது.2018 ல் இருந்து ஏற்கனவே ஒரு MRI ஸ்கேன் செயல்பட்டு வருகின்றது.
அதிகப்படியான MRI ஸ்கேன் தேவை இருப்பதால் புதிய தொழில் நுட்ப வசதியுடன் MRI ஸ்கேன் தேவை இருந்தது.MRI ஸ்கேன் செய்ய இரண்டு,மூன்று தினங்கள் காத்திருக்க வேண்டிய சூழலும் இருந்தது.இதையடுத்து ஜப்பான் நிதி ஆதார உதவியுடன் அதிநவின MRI ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒரு ஸ்கேன் எடுக்க 40 நிமிடங்கள் ஆகும் என்ற , புதிய MRI ஸ்கேன் மூலம்  20 நிமிடத்திற்குள் எடுத்துக் கொள்ள முடியும்.தினமும் 30 முதல் 35 ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில், இனிமேல் 
கூடுதலான MRI ஸ்கேனை துல்லியமாக எடுக்க முடியும். நரம்பியல், இருதவியல், புற்றுநோய் தொடர்பான பாதிப்புகளை கண்டறிய  இந்த MRI ஸ்கேன் உதவியாக இருக்கும்.

தமிழக முதல்வர் 3.5 ஆண்டுகளில் பெரிய வளர்ச்சியை கொடுத்து இருக்கின்றார். கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில்  கூடுதல் வசதிகள் இந்த அரசால் செய்யப்பட்டுள்ளது.புறநோயாளிகளின் எண்ணிக்கை
2021 ல் 3000 வரை இருந்தது.
இப்போது 4800 பேராக அதிகரித்து இருக்கின்றது. இது அரசு மருத்துவவமனையில் சிகிச்சை பெற விரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை காட்டுகின்றது.

இந்த மருத்துவமனைக்கு பாதாள சாக்கடை, சாலை சீரமைப்பு பணிகளுக்கு 9.56 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கி இருக்கின்றது.படுக்கை விரிப்பு, தலையனை போன்றவற்ள சலவை செய்ய 2.20 செலவில் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

பழைய கட்டிடத்திற்கும் புதிய கட்டிடத்திற்கும் கனெக்டிங் கேரிடார் ஒன்றும் அமைக்கப்பட இருக்கின்றது.கோவையில்  72 
நலவாழ்வு  மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மாநகராட்சி பகுதியில் 45 இடங்களில் நகர்புறநலவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றது. 45 மருத்துமனைகளிலும் ஒவ்வொரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவியாளர் என  4 பணியிடங்கள் நியமிக்கபட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வழங்கப்பட்டுள்ளது

இந்த மையங்களில் மருத்துவத்துறை  கடமைகளாக  காலை 8-12 மணி வரையும்,
மாலை 4-8 மணிவரையும் செயல் பட வேண்டும் என அறிவுறுத்தபட்டு இருந்தது.நேற்று மாலை 4 மையங்களில் 
திடீர் சோதனை நடத்தப்பட்டது.இரண்டு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருந்தனர். இரண்டு இடங்களில் மருத்துவர்கள் இல்லாமல் இருந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் 500 இடங்களில் இது போன்ற மருத்துவமனைகள் திறக்கபட்டுள்ளது. இன்னும் 208 இடங்களில் திறக்க வேண்டி இருக்கின்றது.

இன்று முதல் இந்த மருத்துவமனைகளில் காலை மாலை ஆய்வு செய்து கண்காணிக்கவும், வராமல் இருக்கும் மருத்துவர்களை விடுவிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவர்கள் பணி 
ஒப்பந்த பணிகள் என்பதால் வரதவர்களை உடனடியாக பணியில்  இருந்து விடுவிக்கபட்டு , உடனடியாக தகுதியான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் அறவுறுத்தபட்டுள்ளது.

கணிக்கு முறையாக வராதவர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுகு உத்திரவிடப்பட்டுள்ளது.பார்வை நேரம் குறித்து விளம்பர பலகைகளில் வைக்கவும் அறிவுறுத்தபட்டுள்ளது.இந்த மருத்துவ மையங்கள் 208 இடங்களில் இன்னும் திறக்க வேண்டி இருக்கிறது.சென்னையில்
7,8 இடங்களில் போதிய இடம் கிடைக்காததால் திறக்க முடியவில்லை.

கட்டுப்படுத்தபட்ட ,
தடை செய்யப்பட்ட மாத்திரைகள் விற்பனை  இருந்தால்  நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மருத்துவர்கள் மீது பணி சுமைகள் இல்லை.
ஊடகங்கள் திட்டமிட்டு பணிச்சுமையை ஏற்றுகின்றீர்கள்.
யாருக்கும் எந்த சுமையும் இல்லை.2000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் முறைபடுத்தப்பட இருக்கின்றனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் தராமல் இழுப்பறி செய்யும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீதும் புகார் இருந்தால் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்திகள் அனைத்தும் 
செயல்பாட்டில் இருக்கின்றது.

கோவை அரசு மருத்துவமனைக்கு 4500 பேருக்கும் அதிகமாக வருகின்றனர்.
வாகன நிறுத்தம் செய்வது குறித்து கருத்துருக்கள் பெறப்பட்டு வருகிறது.யூடியுபர் இர்பான் விவகாரத்தில் அவருக்கு 
நோட்டீஸ் 
கொடுக்கப்பட டு இருகறது. அவர் செய்தது கொலை குற்றமில்லை.அவர் செய்தது பெரிய விடயமில்லை.

தனியார் மருத்துவமனை 10 நாட்கள் மூடப்பட்டது.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனை மீது போலீஸ் புகார் கொடுத்து இருக்கின்றது.அவர்கள்தான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe