கோவையில் லாட்டரி மாட்டின் மருமகன் உறவினர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை…

published 1 week ago

கோவையில் லாட்டரி மாட்டின் மருமகன் உறவினர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை…

கோவை: கோவை துடியலூர் பகுதியில் உள்ள தொழிலதிபர் மார்ட்டினின் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில்  

இதன் தொடர்ச்சியாக ஆதவ் அர்ஜுனனின் மாமனார் என்ற அடிப்படையில்  கோவை துடியலூர் பகுதியில் உள்ள லாட்டரி மாட்டின் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்*.

கோவையில் துடியலூரை அடுத்த வெள்ளைக்கிணறு பகுதியில் உள்ள அவரது வீடு உட்பட அலுவலகங்களிலும் அமலாக்க துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.


லாட்டரி தொழிலதிபரான மாட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில்  நடைபெறும் இச்சாதனையானது இன்று காலை ஏழு மணி முதல் அமலாக்கத் துறையினர் தற்போது வரை சோதனை செய்து வருகின்றனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் கோவையில் உள்ள மார்ட்டினின் வீடு மற்றும் அலுவலகங்களில் சுமார் 4 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe