கோவையில் வாகனம் மோதி இறந்த காட்டுப்பன்றி- கறியை விற்க முயன்ற இருவர் கைது…

published 6 months ago

கோவையில் வாகனம் மோதி இறந்த காட்டுப்பன்றி- கறியை விற்க முயன்ற இருவர் கைது…

கோவை: கோவை, வனச் சரகம் தடாகம் மத்திய மாங்கரை பகுதிக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று காட்டு பன்றி மீது மோதியுள்ளது. அதில் மாங்கரை சோதனை சாவடிக்கு அடுத்து ஆனைகட்டி - கோவை சாலையில் ஓரமாக இறந்த நிலையில் கிடந்து உள்ளது. 

அதை தடாகம் குட்டவெளியை சேர்ந்த மருதாச்சலம் மற்றும் ரங்கநாதன் ஆகிய இருவரும் யாருக்கும் தெரியாமல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்துச் சென்று வெட்டி கூறு போட்டு காட்டுப்பன்றி  கறியை விற்க முயற்சி செய்துள்ளனர். 

வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் என அடிப்படையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த வனப் பணியாளர்கள் அவர்களை சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்து வெட்டி வைத்து இருந்த சுமார் 15 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியை கைப்பற்றி கோவை வனச ரகத்திற்கு எடுத்து வந்து பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்களுக்கு ரூபாய் 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe