வீடுபுகுந்த காட்டு யானை; தொண்டாமுத்தூர் வாசிகள் 'கிலி' - வீடியோ காட்சிகள் உள்ளே...

published 6 months ago

வீடுபுகுந்த காட்டு யானை; தொண்டாமுத்தூர் வாசிகள் 'கிலி' - வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த காட்டு யானை காம்பவுண்ட் சுவரை இடித்து கொண்டு வெளியேறி சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது...

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, தொண்டாமுத்தூர்,  மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொண்டாமுத்தூர் பகுதியில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானையால் பல்வேறு சேதாரங்கள்  ஏற்பட்டு வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர் அருகே கோவில் பூசாரி ஒருவரை காட்டு யானை ஒன்று தாக்கியதில் அவரது காயங்கள் ஏற்பட்டன. அதுமட்டுமின்றி அதே பகுதியில் யானையை விரட்ட முற்பட்ட இளைஞர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள மத்திப்பாளையம் பகுதியில் நள்ளிரவு ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று ஊரை சுற்றி உலா வந்தது. அப்போது ஒரு வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த யானை வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாண்டி செல்ல முற்பட்டபோது காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்த நிலையில் தற்பொழுது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/ApodeMy4Fpo

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe