SDTU சார்பில் கோவையில் நடைபெறும் தொழிலாளர் உரிமை மீட்பு மாநாட்டின் தேதி அறிவிப்பு...

published 6 months ago

SDTU சார்பில் கோவையில் நடைபெறும் தொழிலாளர் உரிமை மீட்பு மாநாட்டின் தேதி அறிவிப்பு...

கோவை: கோவை மண்டலம் சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பாக 6"அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாடு செப்டம்பர் 22-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. 

அதன் லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி கோவை மாவட்ட SDPI அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ரவூப்நிஸ்தார், கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் மன்சூர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொள்கின்றனர். 
 

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொதுச் செயலாளர் ரவூப்நிஸ்தார் கூறியதாவது. மத்திய அரசு 2019-ம் ஆண்டு புதிய மோட்டார் வாகன சட்டத்தை கொண்டு வந்தது. அதனை 2022ம் ஆண்டு திமுக அரசு அமல்படுத்தி ஏழைகளை பாதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்புகள் குறைந்து உள்ளது. இதனால் 48% இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர்.

வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும். வெளிநாடு முதலீடுகளை பெறுவதற்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தால் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகிறது இதற்கு இடையூறு இல்லாத வகையில் SEZ அமைக்க வேண்டும். இந்தியாவில் வணிகம்,தொழில் வளர்ச்சிக்கு உருவாக்கப்பட்ட 360-க்கு மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தற்பொழுது 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி யால் கோவை மண்டலத்தில் ஆயிரக்கணக்கான சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.இதனால் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.மேலும் தமிழக அரசு உயர்த்தி உள்ள மின்சார கட்டணத்தை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி திரும்பிப் பெற வேண்டும்.தேர்தல் வாக்குறுதியில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe