கோவையில் 2-வது நாளாக ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்…

published 6 months ago

கோவையில் 2-வது நாளாக ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்…

கோவை: கோவையில் 2வது நாளாக ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. 
 

கோவை நேரு விளையாட்டு அரங்கில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. 2-வது நாளாக இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் அக்னி வீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணிகளில் சேர 10-வது தேர்ச்சி அல்லது 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். 

இந்த முகாமில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் இளைஞர்கள் முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

 தினமும் ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 3,000 பேர் இந்த முகாமில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆள் சேர்ப்பு முகாமை முன்னிட்டு அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe