கட்டுவிரியன் கடித்து பாம்பு பிடி வீரர் பரிதாப பலி! வீடியோ காட்சிகள் உள்ளே…

published 6 months ago

கட்டுவிரியன் கடித்து பாம்பு பிடி வீரர் பரிதாப பலி! வீடியோ காட்சிகள் உள்ளே…

கோவை: கோவையில் நூற்றுக்கணக்கான பாம்புகளை பிடித்து சாதனை படைத்தவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ,  காளப்பநாயக்கன் பாளையத்தில் கணுவாயில்ஒரு ஒர்க் ஷாப்பில் இங்கே நேற்று இரவு பாம்பு புகுந்தது. இது குறித்து கோவை பிரபல பாம்பு பிடி வீரரான கணுவாயை சேர்ந்த பாம்பு முரளி (வயது 44) என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே அங்கு வந்த பாம்பு முரளி பட்டறையில் மேஜை அடியில் சுருண்டு கிடந்த பாம்பை பிடித்தார்.
அப்போது அது கொடிய விஷமுள்ளகட்டு விரியன் பாம்பு என தெரிய வந்தது. அந்தப் பாம்பை லாவகமாக  பிடித்து சாக்கு கைக்குள்  போடுவதற்கு அவர்முயன்ற போது எதிர்பாராதமாக காலில் கடித்தது.  

அதிர்ச்சி அடைந்த அவர் தல்லாடினார்.  கட்டுவிரியன் கடித்தது என்பதால் உடனே கடித்த இடத்தில் ரத்தத்தை வெளியேற்றி முதல் கட்ட உதவி மூலமாக அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் அதற்குள் விஷம் தலைக்கு ஏறி முரளி உயிருக்கு போராடினார்.அதன் பிறகு அவரை  108 ஆம்புலன்ஸ், மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள்  அவர் இறந்துவிட்டார் .

அதன் பிறகு  வனத்துறை மற்றும்  வடவள்ளி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாம்பு கடித்து உயிர் இழந்த முரளிதரன் இதுவரை ஏராளமான பாம்புகளை பிடித்துள்ளார். இதனால் தான் அவருக்கு பாம்பு முரளிதரன் என பெயர் வந்துள்ளது.

கடைசியில் அவர் பாம்பு கடித்து இறந்தது கோவை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு 3குழந்தைகள் உள்ளனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/LVd0ov8-3jQ

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe