மேற்குமண்டல ஐ.ஜி இடமாற்றம்; கோவை வருகிறார் புதிய ஐ.ஜி!

published 6 months ago

மேற்குமண்டல ஐ.ஜி இடமாற்றம்; கோவை வருகிறார் புதிய ஐ.ஜி!

கோவை: மேற்குமண்டல ஐ.ஜி உட்பட 17 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்குமண்டல ஐ.ஜி-யாக பணிபுரிந்து வந்த பவானீஸ்வரி  காவல் தலைமையிட ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் பட்டியல்:

▪ தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம்

▪ ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம்

▪ மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம்

▪ சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்

▪ மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்

▪ ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம்

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe