கோவை மாநகராட்சி மேயருக்கு தேர்தல் - மாமன்ற கூட்ட அரங்கில் கவுன்சிலர்களுக்கு செல்போன் தடை...

published 6 months ago

கோவை மாநகராட்சி மேயருக்கு தேர்தல் - மாமன்ற கூட்ட அரங்கில் கவுன்சிலர்களுக்கு செல்போன் தடை...

கோவை: கோவை மாநகராட்சியை பொறுத்தவரை 100 வார்டுகள் உள்ளது.இங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டபோது 96 வார்டுகளில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது. 1 வார்டில் எஸ் டி பி ஐ யும்,3 வார்டு அதிமுக,வும் வெற்றி பெற்றது.

 

இதனையடுத்து கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் ஆகிய சிறப்புகளுடன்  பதவியேற்ற கல்பனா ஆனந்தகுமார் குடும்ப சூழ்நிலை காரணமாக இரண்டே ஆண்டுகளில் உடல் நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

தேர்தல் தேதி அறிவிப்பு
காலியாக உள்ள திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது...

இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 6 ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. 

இதில் கணபதி பகுதியை சேர்ந்த 29 வது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு வந்த கவுன்சிலர்களுக்கு  செல்போன் தடை விதிக்கப்பட்டு போலீசாரின் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.தொடர்ந்து மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான  சிவகுரு பிரபாகரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

திமுக மேயர் வேட்பாளர் ரங்கநாயகியை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்றால் கை உயர்த்தி ரங்கநாயகியை ஒரு மனதாக தேர்வு செய்யப்படும், அப்படி எதிர்த்து போட்டியிட்டால் வாக்குப்பதிவு செய்யப்பட்டு யார் மேயர் என்பதை என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி அரிவிப்பார்...

இந்த தேர்தலுக்கு அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் எஸ்டிபிஐ கவுன்சிலர் என நான்கு பேர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe