Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு... ஹைபிரிட் முறையில் பணி!

published 5 months ago

Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு... ஹைபிரிட் முறையில் பணி!

பிரபல cognizant ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹைபிரிட் முறையில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  cognizant  நிறுவனத்தில் சென்னை உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்ற  ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  

அதன்படி தற்போது Onbase Developer பணிக்கு ஆட்கள் எடுக்கஉள்ளனர். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் Hyland OnBase அப்ளிகேஷன் டெவலப்மென்ட்டில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். (பணிக்கு தேவையான சில திறன்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது) Onbase Developer பணியில் 6 - 12 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட பல இடங்களில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படுவர். Hybrid முறையில் பணியாற்றலாம். வாரத்தில் 3 நாட்கள்  அலுவலகம் செல்ல வேண்டும். 2 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம். தகுதி, அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால்,  விரைந்து விண்ணப்பம் செய்வது நல்லது.  இந்த பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய லிங்கை க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe