டேங்கர் லாரி எடுத்து சென்ற பின் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையாளர் கூறியது என்ன?

published 3 days ago

டேங்கர் லாரி எடுத்து சென்ற பின் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையாளர் கூறியது என்ன?

கோவை: உப்பிலிப்பாளையம் மேம்பாலத்தில் விபத்திற்குள்ளான டேங்கர் ஏற்றிச் சென்ற பின்பு மாவட்ட ஆட்சியர் மாநகர காவல் ஆணையாளர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் கூறுகயில், டேங்க் சரி செய்யப்பட்டு மாற்று வாகனத்தில் பாதுகாப்புடனும் பாதுகாப்பு குழுவினருடனும் பீளமேடு டிப்போவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  விபத்து நடந்த இடத்தில் அனைத்து காவல்துறையினர் போக்குவரத்து காவலர்கள் எந்த ஒரு போக்குவரத்து நெரிசலும் ஏற்படாத வண்ணம் பணியாற்றி இருக்கிறார்கள். இண்டஸ்ட்ரியல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். நெடுஞ்சாலை துறையினரும் இதனை தூக்குவதற்கு ஏற்ற கிரேன்களை கொண்டு வந்து உதவியுள்ளனர்.  அதுமட்டுமின்றி இப்பகுதியில் பல்வேறு நபர்களும் தாமாக முன்வந்து உதவி பணிகளை மேற்கொண்டுள்ளனர் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ட்ரக் அங்கு சென்றடைந்த பின்பு போக்குவரத்து மேலும் இதே பாதையில் இயக்குவது இயக்கப்படும். மேம்பால விரிவாக்கம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், எந்த நிலை எடுப்போம் செய்யாமல் விரிவாக்கம் செய்வதற்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனினும் சில நிலை எடுப்புகள் தேவைப்படுகிறது. தொடர்ந்து இதனை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொளப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர், இந்த டேங்கர் லாரியின் முன்பும் பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் தொடர்கின்றன காவல்துறை பாதுகாப்பு வாகனங்களும் பின்தொடர்ந்து செல்கிறது. வாகனத்தின் பலகை நீக்குவது மட்டுமல்லாமல் இங்க இருக்க கூடிய மக்களையும் பாதுகாப்பாக இருக்க வைப்பது தான் பிரதான பணியாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மிகவும் உதவியாக இருந்தார்கள். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மக்களும் ஒத்துழைப்பு நல்கினார்கள். இது வாகன பழுதா அல்லது ஓட்டுனரின் கவன குறைவா என்பது குறித்து இனிமேல் தான் விசாரணை மேற்கொண்டு தெளிவுபடுத்த முடியும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe