வேளாண் பல்கலைக்கழக பொங்கல் விழா- பசு மாடு மிதித்த பட்டியும் அதன் ஐதீகமும்...

published 1 day ago

வேளாண் பல்கலைக்கழக பொங்கல் விழா- பசு மாடு மிதித்த பட்டியும் அதன் ஐதீகமும்...

கோவை: பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலெட்சுமி மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார்.  



இந்நிகழ்வில் 9 பட்டிகள் அமைக்கப்பட்டு பசுமாடு  விடப்பட்ட பொழுது தண்ணீர் மற்றும் நவதானிய பட்டியை மிதித்துச் சென்றது. இதனால் இந்த வருடம் மழைப்பொழிவு மற்றும் விளைச்சல் நன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்நிகழ்வில் வள்ளி கும்மியாட்டம் ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய  கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உழவர்களின்  மேம்பாட்டிற்காகவும் எப்போதும் துணை நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். பல்கலைக்கழகத்தில் 900க்கும் மேற்பட்ட ரகங்களை கொண்டு வந்துள்ளதாகவும் சுதந்திரம் அடைந்த காலத்தில் 50 மில்லியன் டன்னாக இருந்த உணவு உற்பத்தி தற்பொழுது 325 மில்லியன் டன்னாக  உற்பத்தி செய்து வருவதாக தெரிவித்தார்.  
1500 தொழில்நுட்பங்களை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உழவர்களுக்காக வழங்கி இருப்பதாக கூறினார்.

இந்த விழாவில் 12 பட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ள சந்தன மற்றும் குங்குமம் சுபிட்சத்தை குறிக்கும் தண்ணீரும் நவதானியமும்  மழை பொழிவு விளைச்சல் நன்றாக இருக்கும்  என்பதை குறிக்கும்  பால் மற்றும் தயிர் உள்ள பட்டி கால்நடைகளின் சுபிட்சத்தை குறிக்கும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe