தங்கம் விலை சர்ர்ரென சரிவு!

published 6 months ago

தங்கம் விலை சர்ர்ரென சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மத்திய பட்ஜெட் கூட்டத்தில் கடந்த 24ம் தேதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக கடந்த அறிவித்தார்.

அப்போது முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. அன்றைய தினமே கிராமுக்கு ரூ.2,200 குறைந்தது.

இடைப்பட்ட நாட்களில் தங்கம் விலை அவ்வப்போது உயர்ந்தாலும் தொடர் சரிவில் உள்ளது.

தங்கம் தொடர்ந்து விலை சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 விலை உயர்ந்துள்ளது.

பட்ஜெட் அறிவிப்பு முதல் தங்கம் சந்தித்த விலை மாற்றங்கள் (ஒரு கிராம் விலை):

24ம் தேதி - 6,490 ரூபாய்
25ம் தேதி - 6,430 ரூபாய்
26ம் தேதி - 6,415 ரூபாய்
27ம் தேதி - 6,465 ரூபாய்
29ம் தேதி - 6,415 ரூபாய்
30ம் தேதி - 6,385 ரூபாய்
31ம் தேதி - 6,420 ரூபாய்

ஆக.1ம் தேதி - 6,430 ரூபாய்
ஆக.2ம் தேதி - 6,460 ரூபாய்
ஆக.3ம் தேதி - 6,450 ரூபாய்
ஆக.5ம் தேதி - 6,470 ரூபாய்
ஆக.6ம் தேதி - 6,400 ரூபாய்
ஆக.7ம் தேதி - 6,330 ரூபாய்

ஆக.7ம் தேதி (நேற்று) பவுனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை ரூ.560 விலை குறைந்துள்ளது.

தற்போது ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராம் ரூ.6,330க்கும், ஒரு பவுன் ரூ.50,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.464 விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.5,185க்கும், பவுன் ரூ.41,480க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.87க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.87,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe