உக்கடம் மேம்பாலம் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரம்- பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது...

published 6 months ago

உக்கடம் மேம்பாலம் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரம்- பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது...

கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலத்தை  திறந்து வைக்க உள்ளார். 

உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பேரூர், செல்வபுரம், ஆகிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஊர்களுக்கு விரைந்து செல்லும் வகையில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8கி.மீ நீளத்திற்கு இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இவ்விழாவில், அமைச்சர்கள், அரசு தலைமைச் செயலாளர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,அரசு செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சமூக நல ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு உக்கடம் பேருந்து நிலையம், டவுன்ஹால், செல்வபுரம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து போலிசாரும் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe