MY V3 Ads செயலி நீக்கம்; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

published 6 months ago

MY V3 Ads செயலி நீக்கம்; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

கோவை: MYV3Ads நிறுவனத்தின் ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

 MYV3Adsஎன்ற ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்வதாக கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபட்ட செயலியின் நிறுவனர் சக்தி ஆனந்தனும் கைது செய்யப்பட்டார். அவருடன் அந்த நிறுவன பணியாளர்களும் கைதாகினர்.

இதற்கு, அந்த நிறுவனத்தின் மூலம் மாதந்தோறும் வருவாய் பெற்று வந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சில தனி நபர்கள் விளம்பர ஆதாயத்திற்காக இப்படி பொய் புகாரைக் கொடுத்திருப்பதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் முதலீடு செய்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆனால், இந்த விஷயத்தில் போலீசார் கடும் தீவிரம் காட்டினர். இதுபோன்ற வணிகங்கள் பொதுமக்களுக்கு இறுதியில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் செயலியை முடக்க கோவை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சூழலில் MYV3Ads நிறுவனத்தின் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுபோன்ற செயலிகள் ப்ளே ஸ்டோரில் ஆயிரக்கணக்கில் உள்ளன. தினந்தோறும் மோசடி புகார்கள் குவிந்து வருகின்றன. எனவே, அத்தகைய செயலிகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம், ஆன்லைனில் முதலீடு செய்யும் முன் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe