Myv3 யில் இணைவதற்கு கடன் கொடுத்த பெண்- வட்டி கட்டினாலும் வீட்டை பூட்டி அடாவடி- கோவை கமிஷனரிடம் புகார்...

published 6 months ago

Myv3 யில் இணைவதற்கு கடன் கொடுத்த பெண்- வட்டி கட்டினாலும் வீட்டை பூட்டி அடாவடி- கோவை கமிஷனரிடம் புகார்...

கோவை: கோவை மாவட்டம் காந்திமாநகர் பகுதயில் வசித்து வருபவர் தையல் தொழிலாளியான சுசீலா. இவரிடம் வீட்டின் அருகில் வசிக்கும் சுகன்யா என்ற பெண் MyV3 ஆப்பில் இணைந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு தங்களிடம் பணம் இல்லை என்று சுசீலா கூறவே வட்டிக்கு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார் சுகன்யா.

ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு Myv3 நிறுவனத்தில் நிலவிய பிரச்சினைகள் காரணமாகவே சுசீலா அதில் இணையாமல் தனது மகளின் திருமணத்திற்காக அந்த பணத்தை செலவு செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து வட்டி செலுத்தி வந்த நிலையில் சுசீலா இருக்கும் வீட்டின் பத்திரத்தை கேட்டு சுகன்யா மிரட்டியுள்ளார்.  வீட்டை போகியத்திற்கு கொடுத்து முழுபணத்தையும் தர வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுசீலா வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில் சுகன்யா மேலும் ஒரு பூட்டை கொண்டு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.  இது குறித்து கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சுசீலா புகாரளித்த நிலையில்  கடன் கொடுத்த சுகன்யாவிற்கே போலிசார் ஆதரவாக செயல்படுவதாகவும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் பிலோமினா பாதிக்கப்பட்ட சுசீலாவுடன் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பிலோமினா கூறுகையில் சரவணம்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம் என்று தாங்கள் அறிவித்ததை தொடர்ந்தே சுசீலாவின் வீட்டை திறந்து விட்டதாகவும் சுசிலாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கூறினார்.ல்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe