கோவையில் கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது...

published 6 months ago

கோவையில் கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது...

கோவை: கோவை, சவுரிபாளையம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் சண்முகநாதன். கூலித் தொழிலாளி இவருடைய மனைவி பாக்கியம். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

 சண்முகநாதன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறு செய்வதாக தெரிகிறது. இந்நிலையில் கணவர் சண்முகநாதன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாக்கியம் தனது உறவினர்களிடம் கூறினார். 

இதைத் தொடர்ந்து சண்முகநாதனின் சகோதரர் கேசவன், தங்கை மகாலட்சுமி ஆகியோர் வீட்டிற்கு சென்று சண்முகநாதனின் உடலை பார்த்தனர். அப்பொழுது மகாலட்சுமி சகோதரர் சண்முகநாதன் கழுத்தில் காயங்கள் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தார். இது குறித்து கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

அதில் தனது சகோதரர் சண்முகநாதன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் இறந்து கிடந்த சண்முகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் சண்முகநாதனின் மனைவி பாக்கியத்திடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன் தினமும் மது குடித்துவிட்டு வந்து வீட்டிற்கு குழந்தைகளையும், தன்னையும் அடித்துக் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் சம்பவத்தன்று அவர் மது குடித்துவிட்டு வந்து அடித்துக் கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்தார். 

இதனால் ஆத்திரமடைந்து தான் கணவன் சண்முகநாதனை அயர்ந்து தூங்கும் போது சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறினார். இதனால கணவனை, மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலமானது. இதை அடுத்து மனைவி பாக்கியம் கைது செய்யப்பட்டார். மேலும் கணவரை கழுத்தை இறுக்கிக் கொன்றது தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரியவந்து உள்ளதாக, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைதான பாக்கியம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கணவனை, மனைவியே கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe