வதந்தியை நம்பாதீர்கள்; கோவையில் கலெக்டர் அலுவலகத்தில் குவியும் பெண்கள்!

published 6 months ago

வதந்தியை நம்பாதீர்கள்; கோவையில் கலெக்டர் அலுவலகத்தில் குவியும் பெண்கள்!

கோவை: மகளிர் உரிமைத் தொகைக்கு மனுக்களை விண்ணப்பியுங்கள் என்று வந்த தவறான குறுஞ்செய்தியை நம்பி வந்த பெண்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான மனுக்களை உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கொடுக்க வேண்டும் எனவும் இந்த முகாம் இன்று திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே நடைபெறும் எனவும் தமிழகம் முழுவதும் whatsappல் குறுஞ்செய்தி ஒன்று பரவி உள்ளது. இதனை நம்பி அந்தந்த ஊர்களில் உள்ள பெண்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வருகின்றனர்.
கோவைக்கான உண்மையான அரசு அறிவிப்புகளை உங்கள் மொபைலில் பெற NewsClouds வாட்ஸ்-ஆப் குழுவில் இணைந்திடுங்கள்!

அதேபோல் கோவை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் இந்த குறுஞ்செய்தியை நம்பி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வருகை புரிந்து வருகின்றனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதுபோன்ற எந்த ஒரு சிறப்பு முகாமும் நடைபெறவில்லை என்பதால் ஏமாற்றமடைந்த பெண்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் இது சம்பந்தமாக அதிகாரிகளை பார்க்க வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் முறையிட்ட நிலையில் சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகாரிகள் யாரும் இருக்க மாட்டார்கள் என காவல்துறையினர் எடுத்துக் கூறியும் நடவடிக்கை இல்லாமல் தாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காத்திருப்பதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மேலும் இந்த குறுஞ்செய்தியை அனுப்பியது யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe