SC பட்டியலில் இருந்து நீக்கினால் கும்பிடு போடுவேன் - கிருஷ்ணசாமி!

published 6 months ago

SC பட்டியலில் இருந்து நீக்கினால் கும்பிடு போடுவேன் - கிருஷ்ணசாமி!

கோவை: எஸ்.சி பட்டியலிலிருந்து தேவந்திர குலவேளாளர்களை வெளியேற்றிவிட்டால் நான் கும்பிடு போட்டு போய்விடுவேன் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மேற்குவங்கத்தில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை புதிய தமிழகம் கட்சி வண்மையாகக் கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் முழுமையான விசாரணை வேண்டும்.

கொல்கத்தாவில் சட்டம், ஒழுங்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. கலவரம் நீடித்தால் மாநில அரசு வசம் உள்ள சட்டம், ஒழுங்கை மத்திய அரசு நேரடியாக கண்காணிக்க வேண்டும்.

வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும். நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவில்லை. அதுபோன்று இந்த வழக்கிலும் இருக்கக் கூடாது.

மருத்துவர்களின் அச்சத்தை மத்திய, மாநில அரசுகள்  போக்க வேண்டும். மேலும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், மாஞ்சோலை, சேலம்  ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் 1920களிலிருந்து தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

அவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது.
மாஞ்சோலையில் ஆறு தலைமுறைகளாக தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.
கம்பெனி குத்தகை முடிந்தவுடன் வெளியேற வேண்டும் என்று வனத்துறை கட்டாயப்படுத்துகிறது.

நிலத்தை அவர்கள் சொந்தம் கொண்டாடவில்லை. அங்கு வாழத்தான் இடம் கேட்கிறார்கள். இந்தியாவில் அரசியல் சாசனத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வியிலும், நிலத்திலும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்கள்.

ஆனால் தேவேந்திர குல வேளாளர்களுக்கும், ஆதிதிராவிட சமூகத்தினருக்கும் உயர்பதவியில் இதுவரையும் இட ஒதுக்கீடு கிடைக்காமல் இருப்பது மிகப்பெரிய அநீதி. இதைச் சரிசெய்ய தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

தேவேந்திர குல வேளாளர்கள், அருந்ததியர், ஆதிதிராவிடர்களில் முக்கியமான பிரதிநிதிகளை அழைத்து முதல்வர் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக  சமூகவலைதளத்தில் தேவையான விவாதங்கள் சர்ச்சைகள் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும்.

அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்துவிட்டு தேவேந்தர குல வேளாளர்களும், ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுத்தாக பேசப்படுவது தவறு. அருந்ததியர்க்கு இட ஒதுக்கீடு  கொடுக்கக்கூடாது என்று சொல்லவில்லை. அனைவருக்கும் இட ஒதுக்கீடு கொடுங்கள். என்று தான் சொல்கிறேன். எஸ்.சி பட்டியலிலிருந்து தேவேந்திர குலவேளாளர்களை வெளியேற்றிவிட்டால் நான் கும்பிடு போட்டு போய்விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe